பாசிப்பருப்பு பிரியாணி 😋செய்வது எப்படி ? 😋🍲🍛

பாசிப்பருப்பு பிரியாணி 😋செய்வது எப்படி ? 😋🍲🍛


தேவையான பொருட்கள்:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1 கப்; இஞ்சி, பூண்டு விழுது – 1/2 கப்; பச்சை மிளகாய் – 5; பிரியாணி அரிசி – 1/2 கிலோ; பாசிப்பருப்பு – 3/4 கப்; கொத்தமல்லி, புதினா ( பொடியாக நறுக்கியது ) – 1 கப்; பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது), சின்ன வெங்காயம், தக்காளி – தலா 1 கப்; எண்ணெய், நெய் – தேவையான அளவு.


செய்முறை:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் தண்ணீர் விட்டு அம்மியில் அரைத்து தனியாக வைக்கவும். மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் முதலில் அரைத்து விட்டு பிறகு தண்ணீர் சேர்த்து கலக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அரிசியில் கொட்டி ஊறவிடவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி புதினா கொத்தமல்லியை வதக்கவும். நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்பு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து வதக்கியதும் அரைத்த மசாலாவை போடவும்.
இந்த கலவையை நன்றாக வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்க விடவும். பின்பு அதில் அரிசி பருப்பு கலவையைப் போட்டு தண்ணீரை வடித்து விடவும். பிறகு இதை குக்கரில் சேர்த்து 1 விசில் விட்டு சலசலப்பு அடங்கியதும் பரிமாறவும்.

%d bloggers like this: