2000 ஆண்டு பழமையான துரித உணவு உணவகம் எரிமலைச் சாம்பலில் கண்டுபிடிப்பு. ரோமானியர்களின் பாம்பே நகரில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான துரித உணவு உணவகம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 79 ல் வெசுவியஸ் மலையில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தில் அழிந்தது தான் இந்த துரித உணவகம்.முதன் முறையாக ஒரு முழு ‘டெர்மோபோலியத்தை’ அகழ்வராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.

இதே இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈரமான சுண்ணாம்புக் கல்லில் வரையப்பட்ட ஒவியங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஓவியங்கள் அந்த உணவகத்தில் விற்கப்பட்ட உணவுகளை குறிக்கும் ஓவியங்களாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாம்பே நகரத்தில் 3ல் ஒரு பகுதியில் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை. இனி இங்கு செய்யப்படும் ஆராய்ச்சியில் என்னென்ன அதிசயங்கள் கிடைக்கும் என்னும் பெரிய எதிர்பார்ப்பை நம் மனதில் ஏற்படுத்தி இருக்கிறது தற்போதைய கண்டுபிடிப்பு.