உருளைக்கிழங்கு கறி  செய்வது எப்படி ? 🍲🍱😋

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி ? 🍲🍱😋

உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4-5; வெங்காயம் – 1,எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.
அரைத்துக்கொள்ள தேவையானவை:
கொத்தமல்லி – 1 கட்டு; பூண்டு – 5 பற்கள்; பச்சை மிளகாய் – 5; வெங்காயம் – 1; பட்டை – 1 துண்டு; லவங்கம் – 2

உருளைக்கிழங்கு கறி


செய்முறை:
குக்கரில் உருளைக்கிழங்குகளை வேக வைக்கவும். பிறகு உருளைக்கிழங்கின் தோலை நீக்கவும்.வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைக்க தேவையான பொருட்களை அரைத்து இதில் சேர்த்து குறைந்த அனலில் வதக்கவும்.இது வதங்கியதும் உரித்த உருளைக்கிழங்கு, உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். தண்ணீர் வற்றி கறி கெட்டிபட்டவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான சைட் டிஷ் தயார்.

உருளைக்கிழங்கு கறி

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..!

%d bloggers like this: