மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் 1035வது சதய விழா 🙏

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் 1035வது சதய விழா 🙏

ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் ராஜராஜ சோழன், இவரது இயற்பெயர் அருள் மொழி வர்மன், தரணி வென்று மண்ணின் வீரத்தை பறைசாற்றிய மாமன்னனுக்கு ஒவ்வொரு வருடமும் இந்நாளில் விழா கொண்டாடப்படுகிறது,
ராஜராஜ சோழன் 985 முதல் 1014 வரை ஆட்சியில் இருந்தார் , இவரது ஆட்சிக் காலம் சோழ மரபினரின் பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது ,
படையெடுத்து சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிகளைக் குவித்து தெற்கு ஆசிய நாடுகள் முழுவதையும் தனது குடைக்குள் கொண்டு வந்த பெருமை ராஜராஜ சோழனையேசாரும் ,

11 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் முஹமது கஜினி இந்தியா மீது படையெடுத்தான்,நாட்டின் பல பிரதேசங்களின் மீது தாக்குதல் நடத்திய அவனது படைகள் ராஜராஜ சோழனின் வீரத்திற்கு அஞ்சி , இந்த பக்கம் வரவேயில்லை , இவ்வாறு உலகம் போற்றும் மாவீராக விளங்கினார் ராஜராஜ சோழன், உலகமே வியக்கும் வகையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார் , 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன, ஒவ்வொரு ஆண்டும் சதயவிழா இந்த தஞ்சை பெரியக் கோவிலில் தான் கொண்டாடப்படுகிறது,

இன்று சதய விழா கொண்டாடப்படுகிறது , பொதுவாக கலைநிகழ்ச்சிகள் தஞ்சையில் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு கொரோனா காரணமாக விழா எளிமையாக நடைபெற்றது ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சதய விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு 48 மங்கல பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது ,https://emptypaper.in

%d bloggers like this: