10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️

10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.☔️

வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்,என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

%d bloggers like this: