பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற டிவில்லியர்ஸ் 🏏

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற டிவில்லியர்ஸ் 🏏

மாலை துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 போட்டியின் 33 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து ,

துவக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக் களம் காண உத்தப்பா அதிரடி காட்ட ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 5.4 ஓவரில் ஸ்டோக்ஸ் (19 பந்துகளில் 15 ரன்கள்) எடுத்து கிரீஸ் மோரிஸ் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து சாம்சன் களம் இறங்க ஆட்டத்தின் 7.4 ஓவரில் அதிரடியாக விளையாடி வந்த உத்தப்பா (22 பந்துகளில் 41 ரன்கள்) சாஹல் சுழலில் ஆரோன் பின்ச் வசம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார் ,

அதற்கு அடுத்த பந்தில் சாம்சன் (6 பந்துகளில் 9 ரன்கள்) சாஷல் சுழலில் மோரிஸ் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் இணை ரன்களை உயர்த்த ஆட்டத்தின் 15.3 ஓவரில் பட்லர் ( 25 பந்துகளில் 24 ரன்கள்) மோரிஸ் பந்துவீச்சில் ஷைனி வசம் பிடிபட்டு வெளியேற ஸ்மித் திவாடியா இணை ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 19.2 ஓவரில் மோரிஸ் பந்துவீச்சில் ஸ்மித் (36 பந்துகளில் 57 ரன்கள்) வெளியேற ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆர்ச்சர் (3 பந்துகளில் 2 ரன்கள்) எல் பி டபிள்யு முறையில் அவுட் ஆக திவாடியா (11 பந்துகளில் 19 ரன்கள்) நாட் அவுட் 20 ஓவர்களில் 177/6 என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

ஆட்டத்தின் அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக தேவ்டட்படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் இணை களம் கண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 3.3 ஓவரில் பின்ச் (11 பந்துகளில் 14 ரன்கள்) எடுத்து கோபால் சுழலில் உத்தப்பா வசம் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து கேப்டன் விராட் கோலி படிக்கல் இணை ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 12.6 ஓவரில் படிக்கல் (37 பந்துகளில் 35 ரன்கள்)

எடுத்து திவாடியா பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்ப அடுத்து 13.1 ஓவரில் கேப்டன் விராட் கோலி (32 பந்துகளில் 43 ரன்கள்) எடுத்து தியாகி பந்துவீச்சில் ஃபௌட்டரி லயனில் திவாடியா அருமையான கேட்ச் முறையில் கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார் அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் மற்றும் குர்கீரிட் சிங் இணை நாட் அவுட் முறையில் கடைசி வரை களத்தில் நின்று டிவில்லியர்ஸ்ன் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் 19 வது ஓவரில் உனாட்கட் 25 ரன்களை விட்டு கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது முடிவில் 19.4 வது ஓவரில் 179/3 எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஸ்கோர் விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 177/6(20 ஓவர்கள்)
ஸ்மித் 57 ரன்கள்
உத்தப்பா 41 ரன்கள்
பட்லர் 24 ரன்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 179/3(19.4 ஓவர்கள்)
டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன்கள் நாட் அவுட்
விராட் 43 ரன்கள்
படிக்கல் 35 ரன்கள்

%d bloggers like this: