சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் 🏏

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் 🏏

நேற்று இரவு சேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 37 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்றன டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது ,

பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வரும் போட்டிகள் அனைத்தும் சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கும்போது போட்டி மந்தமாக சென்றது துவக்க வீரர்களாக சாம் குர்ரம் மற்றும் டூப்ளிஸ் இணை களம் காண ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் டூப்ளிஸ் ஆர்ச்சர் வேகத்தில் பட்லர் வசம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய வாட்சன் ஒற்றை இலக்க ரன்களில் தியாகி பந்துவீச்சில் (3 பந்துகளில் 8 ரன்கள்)

அடுத்து களமிறங்கிய ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைக்கும் பொழுது குர்ரம் மற்றும் ராயுடு இணை மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 8.2 வது ஓவரில் சாம் குர்ரம் (25 பந்துகளில் 22 ரன்கள்) கோபால் பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து கேப்டன் தோனி ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 9.6 ஓவரில் ராயுடு (19 பந்துகளில் 13 ரன்கள்) திவாடியா பந்துவீச்சில் கீப்பர் சாம்சன் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார் அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுத்து சென்னை அணியினர் முதல் 10 ஓவர்கள் முடிவில் 56/4 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலையில் அடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கும் போது ஆட்டம் அதே பாணியில் சென்றது அடுத்து ஜடேஜா மற்றும் தோனி இணை ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 17.4 ஓவரில் தோனி ( 28 பந்துகளில் 28 ரன்கள்) ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் ஜடேஜா தன் பங்குக்கு (30 பந்துகளில் 35 ரன்கள்) நாட் அவுட் முறையிலும் ஜாதவ் தன் வழக்கமான பாணியில் 7 பந்துகளில் 4 ரன்கள் நாட் அவுட் அணியின் ஸ்கோர் ( 20 ஓவர்கள் முடிவில் 125/5) எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டனர் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக பென் ஸ்டோக் மற்றும் உத்தப்பா களம் இறங்கி ஆடிவர ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பென் ஸ்டோக் (11 பந்துகளில் 19 ரன்கள்)

தீபக் சஹர் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்த 3.2 வது ஓவரில் உத்தப்பா (9 பந்துகளில் 4 ரன்கள்) அசில்வுட் பந்துவீச்சில் தோனி வசம் பிடிபட்டு வெளியேற போட்டியின் 4.3 வது ஓவரில் சாம்சன் டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் ஆட்டத்தின் முதல் 10 ஓவர்கள் வரை 59/3 சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர் வெற்றிக்கு தேவையான இலக்கு பெரிதளவில் இல்லாத நிலையில் கேப்டன் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறு முனையில் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த (17.3 வது ஓவரில் 126/3 ) எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் நாட் அவுட்
பட்லர் 48 பந்துகளில் 70 ரன்கள் நாட் அவுட்
ஆட்டநாயகனாக பட்லர் தேர்வானார்
ஸ்கோர் விவரம் சென்னை சூப்பர் கிங்ஸ் 125/5(20 ஓவர்கள்)
ஜடேஜா 35 ரன்கள்
தோனி 28 ரன்கள்
சாம் குர்ரம் 22 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் 126/3(17.3 ஓவர்கள்)
பட்லர் 70 ரன்கள் ரன்கள் நாட் அவுட்
ஸ்மித் 26 ரன்கள் நாட் அவுட்
பென் ஸ்டோக் 19 ரன்கள்

%d bloggers like this: