மனீஷ் பாண்டேவின் நேர்த்தியான ஆட்டம் மற்றும் விஜய் சங்கர் பார்ட்னர் ஷிப்ல் சன் ரைசரஸ் ஐதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 🏏

மனீஷ் பாண்டேவின் நேர்த்தியான ஆட்டம் மற்றும் விஜய் சங்கர் பார்ட்னர் ஷிப்ல் சன் ரைசரஸ் ஐதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 🏏

நேற்றைய தினம் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 40 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற சன் ரைசரஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக பென் ஸ்டோக் மற்றும் உத்தப்பா களம் இறங்கி ஆடிவர நன்றாக ஆடிக்கொண்டிருந்த உத்தப்பா ஆட்டத்தின் 3.3 வது ஓவரில் (19 ரன்கள் 13 பந்துகளில்) துரதிர்ஷ்டவசமாக பந்தை சரியாக கணிக்காமல் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து கீப்பர் சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் இணை ரன்களை உயர்த்த ஆட்டத்தின் 11.4 ஓவரில் சாம்சன் (36 ரன்கள் 26 பந்துகளில்)

ஹோல்டர் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் நிதானமாக ஆடி வந்த பென் ஸ்டோக் (30 ரன்கள் 32 பந்துகளில்) ஆட்டத்தின் 12.1 வது ஓவரில் ரஷீத் கான் சுழலில் போல் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் பட்லர் மற்றும் கேப்டன் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 15.3 வது ஓவரில் பட்லர் (9 ரன்கள் 12 பந்துகளில்) நதீம் வசம் பிடிபட்டு சங்கர் பந்துவீச்சில் வெளியேறினார்

அடுத்து களமிறங்கிய ரியான் பராக் ஒருசில பந்துகளில் அதிரடி காட்ட ஆட்டத்தின் 18.1 ஓவரில் ஸ்மித் (19 ரன்கள் 15 பந்துகளில்) மனீஷ் பாண்டே வசம் பிடிபட்டு ஹோல்டர் பந்துவீச்சில் வெளியேற அடுத்த பந்தில் பராக் (20 ரன்கள் 12 பந்துகளில்) வார்னர் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் திவாடியா (2 ரன்கள் 3 பந்துகளில் நாட் அவுட) ஆர்ச்சர் (16 ரன்கள் 7 பந்துகளில் நாட் அவுட் ) 20 ஓவர்கள் முடிவில் 154/6 ஆட்டம் முடிவுக்கு வந்தது
அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணை களம் காண ஆட்டத்தின் முதல் ஓவரின் நான்காவது பந்தில் டேவிட் வார்னர் (4 ரன்கள் 4 பந்துகளில்)

ஆர்ச்சர் வேகத்தில் ஸ்டோக் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அடுத்து மனீஷ் பாண்டே களம் இறங்கி ஆடிவர ஆட்டத்தின் 2.4 வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ (10 ரன்கள் 7 பந்துகளில்) மீண்டும் ஆர்ச்சர் வேகத்தில் ஸ்டோக் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக தமிழக வீரர் விஜய் சங்கர் களம் இறங்கி ஆடிவர மனீஷ் பாண்டே மற்றும் சங்கர் இருவரும் நல்ல கூட்டணி அமைத்து விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வழிநடத்திச் சென்றனர் துவக்கத்தில் 16 / 2 என்ற நிலையில் மனீஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி (83 ரன்கள் 47 பந்துகளில் நாட் அவுட்)அரை சதத்துடனும் சங்கர் நிதானமாக (52 ரன்கள் 51 பந்துகளில் நாட் அவுட்) அரை சதம் அடித்து 18.1 வது ஓவரில் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்
ஸ்கோர் விவரம்-
ராஜஸ்தான் ராயல்ஸ் 154/6(20 ஓவர்கள்)
சாம்சன் 36 ரன்கள்
ஸ்டோக்ஸ் 30 ரன்கள்
ரியான் பராக் 20 ரன்கள்
சன் ரைசரஸ் ஐதராபாத்
156/2(18.1 ஓவர்கள்)
மனீஷ் பாண்டே 83 ரன்கள்
விஜய் சங்கர் 52 ரன்கள்
மனீஷ் பாண்டே ஆட்டநாயகனாக தேர்வானார்

%d bloggers like this: