சப்போடாவை இப்படியும் பயன்படுத்தலாமா?
முகம் பிரகாசமாக இருக்க சப்போட்டா பழத்துடன் சிறிது சந்தனமும் ரோஸ் வாட்டரும் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவலாம்.

1 கப் நல்லெண்ணையுடன் 1 டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடர் சிறிது மிளகுத்தூள் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து வடிகட்டவும். வடிகட்டிய எண்ணெயை தலைக் குளிக்கும் முன்பு தலையில் தடவி ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வது குறையும்.

சருமத்தில் உள்ள வறட்சி நீங்க சப்போடா பழத்துடன் பயத்தமாவு சிறிது விளக்கெண்ணெய் கலந்து சருமத்தில் தடவி குளிக்கலாம்.

உலர்ந்த சப்போடாபழத் தோல், சப்போடா விதை, கடுக்காய், வெந்தயம்,உலர்ந்த செம்பருத்தி பூ அனைத்தையும் பொடி செய்து சீயக்காய்க்கு பதில் உபயோகித்தால் முடியிலுள்ள பிளவு மற்றும் வறட்சி நீங்கும்.
சப்போடா விதை பவுடரை விளக்கெண்ணெயுடன் கலந்து நன்கு ஊற வைத்து தலை குளித்தால் பொடுகு பிரச்சனை குறைவதுடன் கூந்தல் மிருதுவாகும்.
