இன்று வானில் தோன்ற இருக்கும் அதிசயம் 🌏🌠

இன்று வானில் தோன்ற இருக்கும் அதிசயம் 🌏🌠

இன்று வானில் தோன்ற இருக்கும் அதிசயம்:


இன்று(டிசம்பர் 21,திங்கட்கிழமை) 397 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே கோளாக காட்சியளிக்கயிருக்கின்றன. அதாவது இந்த இரு கோள்களும் ஒரே நேர் கோட்டில் தோன்றி ஒரே கோள் போன்ற தோன்ற இருக்கின்றன. இந்த அரிய நிகழ்வை நாம் அனைவரும் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இதனால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று வானில் தோன்ற இருக்கும் அதிசயம்


வியாழன் சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகளும் சனிக்கோள் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகளும் ஆகும். அதேபோல வியாழன் கோளானது பூமியிலிருந்து 88.5 கோடி கீ.மீ. தொலைவிலும் சனிக்கோளானது பூமியிலிருந்து 160 கோடி கீ.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. சூரியனிலிருந்து ஐந்தாவது கோளும், சூரிய குடும்பத்தின் பெரிய கோளுமான “வியாழனும்” சூரியனிலிருந்து ஆறாவது கோளும், சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோளுமான “சனியும்” சேரும் ‘ வியாழன்-சனி’ சேர்க்கை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.


ஆனால் இந்த இரு கோள்கள் இவ்வளவு அருகில் தோன்றவிருப்பது 397 ஆண்டுகளுக்கு(1623 ஆண்டு) பிறகு இன்று தான். இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் சுமார் 45 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரம் வரை இந்த அரிய நிகழ்வு நிகழ இருக்கிறது.
எனவே வானில் தோன்றும் இந்த அதிசயத்தை இன்று மறக்காமல் காணுங்கள்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அசுரன் தேர்வு

%d bloggers like this: