இந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்.🛩️

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்.🛩️


இன்று இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் இந்தியாவின் முதல் நீர் விமான நிலையம் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த கடல் விமான சேவையானது ஒற்றுமை சிலை, கெவாடியா மற்றும் சபர்மதி ஆற்றின் முகப்பு, அகமதாபாத் இடையே தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்.
மஞ்சள் ஆமை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா ?

ஒற்றுமை சிலையிலிருந்து அகமதாபாத் செல்லும் பயண நேரமான 4 மணி நேரம் 45 நிமிடங்களாக குறைந்திருப்பது இந்த சேவையின் சிறப்பம்சம்.இது இந்திய விமான பயணத்தில் ஒரு புது சகாப்தம். கடல் விமான சேவை என குறிப்பிட்டிருந்தாலும் இந்த சேவை சபர்மதி ஆற்றங்கரையில் இருந்தே தொடங்கப்படுகிறது.
இந்த விமான சேவையானது நீரில் இருந்து புறப்பட்டு நீரிலேயே தரையிறங்கும் வகையிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.வல்லபாய் பட்டேல் அவர்களை பெருமைபடுத்தும் விதமாகவும் சுற்றுலா தலமாகவும் வடிவமைக்கப்பட்டது தான் ஒற்றுமை சிலை. இப்போது இந்த விமான சேவை மூலம் சுற்றுலா மேம்பட்டிருப்பதோடு பலருக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.
இந்த சேவையானது ஒரு நாளைக்கு 8 முறை என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானமானது 14 பயணிகளை உடைய பார்ட் 2பி வகை மிதக்கும் விமான வகையைச் சார்ந்தது என்பது கூடுதல் சிறப்பு.

%d bloggers like this: