வீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏

வீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது

சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக வீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் களம் காண வரும் போட்டிகளில் வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் ஆட்டத்தின் துவக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பவர் பிளே ஓவர்கள் முடிவில் 77/0 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 9.4 வது ஓவரில் டேவிட் வார்னர் அரை சதம் கடந்து (34 பந்துகளில் 66 ரன்கள்)

ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அடுத்து மனீஷ் பாண்டே/ சாஹா ஜோடி ஆட்டத்தை தொடர அதிரடியாக ஆடி வந்த சாஹா ஆட்டத்தின் 14.3 வது ஓவரில் அரை சதம் கடந்து (45 பந்துகளில் 87 ரன்கள்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டு நோர்ட்ஜே பந்துவீச்சில் ஸ்ரேயாஸ்அயர் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து கேன் வில்லியம்சன் களம் காண மனீஷ் பாண்டே 31 பந்துகளில் 44 ரன்கள் நாட் அவுட் முறையிலும் வில்லியம்சன் 10 பந்துகளில் 11 ரன்கள் நாட் அவுட் முறையிலும் 20 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 219/2 என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வர

அடுத்த பாதியில் கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடர்ந்த டில்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக ரகானே/ தவான் களம் கண்டு ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்துகளில் தவான் ரன் ஏதும் அடிக்காமல் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் வார்னர் வசம் பிடிபட்டு அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தி வெளியேற அடுத்து ஓவரின் கடைசி பந்தில் ஸ்டோனிஸ் 5 ரன்களில் நதீம் பந்துவீச்சில வார்னர் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக ஹெட் மயர்/ ரகானே இருவரும் ஆட்டத்தின் 6.1/6.5 வது ஓவரில் அடுத்து அடுத்து ரஷீத் கான் சுழலில் வெளியேறினர் ஹெட் மயர் (13 பந்துகளில் 16 ரன்கள்) ரகானே (19 பந்துகளில் 26 ரன்கள்)

விக்கெட் கீப்பர் பண்ட் சற்றே ஆறுதலாக நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற துஷர் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பண்ட் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் விக்கெட் இழக்க துஷர் பாண்டே 9 பந்துகளில் 20 ரன்கள் நாட் அவுட் முறையில் ஆட்டம் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 131 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வர சன் ரைசரஸ் ஐதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
வீர்த்திமான் சாஹா ஆட்டநாயகனாக தேர்வானார்

ஸ்கோர் விவரம்-
சன் ரைசரஸ் ஐதராபாத் 219/2(20 ஓவர்கள்)
சாஹா 87 ரன்கள்
வார்னர் 66 ரன்கள் மனீஷ் பாண்டே 44 ரன்கள் நாட் அவுட்

டில்லி கேப்பிடல்ஸ் 131/10(19 ஓவர்கள்)
பண்ட் 36 ரன்கள்
ரகானே 26 ரன்கள்
துஷர் 20 ரன்கள் நாட் அவுட்

%d bloggers like this: