வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு☔🌩️⛈️🌧️🌩️⛈️🌧️

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு☔🌩️⛈️🌧️🌩️⛈️🌧️

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மிதமான மழையும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனவும் அடுத்த 48 மணி நேரத்தில் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  லேசான மழையும்,  நீலகிரி மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்  பெய்யக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

%d bloggers like this: