இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

புரேவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

புரெவி புயலினால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திரமோடி தமிழக – கேரள முதலமைச்சர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பத்து காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் டாப் 10 காவல்நிலையங்களில் சூரமங்கலம் காவல்நிலையம் இடம்பிடித்ததற்கு முதல்வர் பாராட்டு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடர்பாக இஸ்ரோ-வின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி சிவதாணு பிள்ளை எழுதிய புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.

‘மசாலா கிங்’ என்று அழைக்கப்படும் மகாஷே தாரம்பால் குலாட்டி இன்று காலை காலமானார் !!

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

நடிகை வரலட்சுமி சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

%d bloggers like this: