இன்றைய தலைப்புச் செய்திகள்..! 19/12/2020📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 19/12/2020📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சேலம் மாவட்டம், இருப்பாளியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் தொடங்கினார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 – முதல்வர் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் புதுதில்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது

கோவா விடுதலை நாளாகிய இன்று, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கோவா விடுதலை நாள் கொண்டாட்டங்களை குடியரசு தலைவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் இருக்கும் தியாகிகள் நினைவிடத்தில், கோவா விடுதலை போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் இன்று பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வு

பன்னீர் சப்பாத்தி எப்படி செய்வது ?

%d bloggers like this: