பயனுள்ள குறிப்புகள்:
ஜவ்வரிசி வடகத்திற்கு பச்சை மிளகாயுடன் சிறிது பூண்டு சேர்த்தால் வடகம் மணமாக இருக்கும்.

காபி, டீ பாத்திரங்களில் உள்ள கறை மறைய ஈரத்துணியில் சிறிது சோடா மாவு சேர்த்து தேய்த்த பின் பாத்திரத்தை சாதாரணமாக கழுவவும்.

நெய் காய்ச்சிய பாத்திரத்தை சுலபமாக கழுவ நெய் காய்ச்சிவதற்கு முன்பு பாத்திரத்தின் உட்பகுதியில் சிறிதளவு வெண்ணெயைத் தடவவும்.

கேரட் அல்வா செய்யும்போது இதில் ஒரு கப் கரைத்த பால் பவுடர் சேர்த்தால் அல்வா கூடுதல் சுவையாக இருக்கும்.

உளுந்து வடைக்கு உளுந்து ஊற வைக்கும் போது ஒரு பிடி துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து வடை செய்தால் வடை அதிகம் எண்ணெய் குடிக்காது.
