சமையலறைக் குறிப்புகள்📝

சமையலறைக் குறிப்புகள்📝


அரிசியில் வண்டு பிடிக்காமல் இருக்க 2-3 காய்ந்த மிளகாயை அரிசியில் போட்டு வைக்கலாம்.


உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க அதை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இவ்வாறு செய்தால் தேங்காய் கெடாது.


கோதுமை மாவு, அரிசி மாவு போன்ற மாவு வகைகளில் பூச்சி வராமல் இருக்க இதில் சிறிது பிரியாணி இலை மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வைக்கவும்.


மிக்ஸி ஜாரின் பிளேட் ஷார்ப்பாக கல் உப்பு ஒரு கைப்பிடி போட்டு அப்படியே அதை அரைத்தால் பிளேட் ஷார்ப்பாகிவிடும்.


பிரிட்ஜில் உள்ள துர்நாற்றம் போக 1 ஸ்பூன் சோடா உப்பை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜின் உட்புறம் மூலையில் வைக்கலாம்.

ஆப்பிள் வெட்டியவுடன் நிறம் மாறாமல் இருக்க அதன் உட்பகுதியில் எலுமிச்சைச் சாறு தடவினால் நிறமும் மாறாது, சுவையும் மாறாது.எண்ணெய் பாத்திரத்தில் உள்ள பிசுபிசுப்பு போக பாத்திரத்தை கழுவும் முன் 10 நிமிடம் கொதிக்கும் நீரில் ஊறவைத்து பின்பு சாதாரணமாக கழுவவும்.

சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க அதில் 2-3 லவங்கங்களை போடலாம்

%d bloggers like this: