கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு நாள் இன்று !!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு நாள் இன்று !!

கப்பலோட்டிய தமிழன்

வ.உ.சிதம்பரனார்
“கப்பலோட்டிய தமிழன்” “வ.உ.சி.” என்று அனைவராலும் அறியப்படும் சுதந்திர போராட்ட வீரர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5,1872ல் பிறந்தார். இவரது தந்தை உலகநாத பிள்ளை தாயார் பரமாயி அம்மாள்.

கப்பலோட்டிய தமிழன்


இவர் 1895 ஆம் ஆண்டு திருச்சியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். பின்னர் சிறிது காலம் திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றினார்.திலகரின் சீடரான இவர் தமிழகத்தில் திலகரின் கருத்துக்களைப் பரப்பியதால் “தென்னாட்டு திலகர்” எனப் புகழப்பட்டார்.
1905ல் ஏற்பட்ட வங்காளப் பிரிவினை இவரை அரசியலில் ஈடுபடச் செய்தது.சுதேசிய இயக்கத்தின் ஆணி வேராக இருந்த இவரால் தான் நெல்லையில் சுதந்திர வேட்கை பரவியது. நவம்பர் 12,1906ல் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” நிறுவனத்தை நிறுவினார் வ.உ.சி..
இந்த கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை ஆரம்பிக்க இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலிபாவையும்” “எஸ்.எஸ்.லாவோவையும்” வாங்கினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது சுதேசி நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி கொழும்பு இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்.இதுவே இவரை கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கக் காரணமாக இருந்தது.
சுதந்திரத்திற்காக மட்டுமின்றி தூத்துக்குடி பஞ்சாலை தொழிலாளர்களின் போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சி.. 1935 ல் சைவ சித்தாந்த நூலான சிவஞான போதம் எனும் நூலுக்கு உரை எழுதியதன் மூலம் இவர் ஒரு தமிழ் அறிஞராகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.மேலும் இவர் தன்னுடைய சுய சரிதையை கவிதையாக எழுதியிருக்கிறார்.
இவர் நவம்பர் 18 , 1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசிய அலுவலகத்தில் பாரதியாரின் வரிகளைக் கேட்டவாரே இயற்கை எய்தினார்.

கப்பலோட்டிய தமிழன்

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி

%d bloggers like this: