சுவையான வடைகறி செய்வது எப்படி?🥘🍜😋

சுவையான வடைகறி செய்வது எப்படி?🥘🍜😋

வடைகறி செய்வது எப்படி
தேவையானவை: கடலை பருப்பு – 1 கப்; வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது); உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப; பூண்டு – 4 பற்கள்; தனியா – 1 டேபிள்ஸ்பூன்; சீரகம் – 1/2 டீஸ்பூன்.

வடைகறி செய்வது எப்படி

செய்யும் முறை:
கடலை பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பு நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டுஅதனுடன் பூண்டு, தனியா சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். இதில் உப்பு, வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டையாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.வடைகளை மொரு மொருப்பாகப் பொரிக்க வேண்டாம்.
மசாலாவிற்கு தேவையானவை :
தக்காளி – 1/4 கிலோ (வெந்நீரில் தோல் நீக்கி); பெரிய வெங்காயம் – 4( நீளவாக்கில் நறுக்கியது); தோலுரித்த முழு பூண்டு – 2 , மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு.
அரைக்க வேண்டியவை :
வெங்காயம் – 1; இஞ்சி – 1 துண்டு; பொட்டுக்கடலை – சிறிது; காய்ந்த மிளகாய் – 5; பச்சை மிளகாய் – 5; சோம்பு, ஏலக்காய், லவங்கம் – தலா 3.


வடைகறி செய்முறை:
எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும். மேலும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்க்கவும். இது நன்றாக கொதித்த பிறகு பொரித்த வடைகளை சேர்த்து இறக்கவும். இதில் சிறிது கொத்தமல்லித்தழையை சேர்த்து சூடாக பரிமாறினால் மேலும் சுவையாக இருக்கும்.

வடைகறி செய்வது எப்படி

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 

%d bloggers like this: