உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!🛣️🏞️

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!🛣️🏞️

இமாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை குகைப்பாதையை பிரதமர்‌ திரு.மோடி திறந்து வைத்தார் …,

9.2 கிமீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட இந்த சுரங்க சாலைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது …

இதில் பயணம் செய்வதால் மணலிலே இடையேயான பயணத்தொலைவு 46 கிலோமீட்டர் தொலைவு குறைந்து பயண நேரம் 5மணி நேரம் குறையும் …

இது பீர் பாஞ்சல் மலைத் தொடரில் 10171 அடி உயரத்தில் அமைந்துள்ளது …இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு உள்ள மிக நீளமான சுரங்கம் ஆகும்.

10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று, நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது!

“அடல் சுரங்கப் பாதை” ,”Atal tunnel” என பெயரிடப்பட்டு உள்ள இந்த சுரங்கப் பாதையில், ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி வைக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: